எம்மை பற்றி



Sunday, May 4, 2014

CHAOS THEORY (ஒழுங்கின்மை கோட்பாடு)

 உலகில் எல்லா நடப்புகளும் கோர்வையாக பிரபஞ்சத்தோடு தொடர்ப்புடையதாக இருக்கிறது என்று  விளக்குவதற்கு முயற்சித்ததால் இந்த கட்டுரை பிறக்கிறது.

பிரபஞ்சத்தில் அத்தனையும் ஒரு ஒழுங்கு முறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது ஆனால் இப்போது ஒழுங்கான நிலையிலிருந்து ஒழுங்கற்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒழுங்கற்ற தன்மையோடு இருக்கும் தொடர் செயல்களில் ஒரு ஒழுங்கை தேடும் நிலை ஒழுங்கின்மை கோட்பாடு (CHAOS THEORY)எனப்படும்.

இந்த சித்தாந்தத்தின்படி ஒரு விஷயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை ஏற்படுத்த முடியும். இந்த விளைவை (Butterfly Effect )பட்டாம் பூச்சி விளைவு என்று சொல்வார்கள்.


இதற்கு (butterfly effect) பட்டாம்பூச்சி விளைவு என்று வரக்காரணம் ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையின் படபடப்பில் துவங்கும் அதிர்விற்கும் ஒரு பூகம்பத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம்
அதாவது (amazon forest) அமேசான் காட்டில் ஒரு பட்டாம் பூச்சி பறக்கும் போது அதன் இறக்கைகள் அசையப்பெற்று அத்தருணத்தில் காற்று மண்டலத்தில் ஒரு மாறுத்தல் ஒன்றை ஏற்படுத்துகிறது, அது படிப்படியாக மாற்றதிற்க்கு உட்பட்டு 5 மாதம் கழித்து ஆப்ரிக்காவில் ஏற்றபடவிருக்கும் போகும் புயல் தடுக்கப்படலாம் அல்லது அதுவே  அங்கு புயல் வரக்காரணமாகவும் இருக்கலாம்.


இந்த உலகத்தில் எல்லா நடப்புகளும் ஒரு சிறிய மூலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதை  அறிய அந்த நடப்பிற்கு பின்னணி என்ன என்று ஆராய்ந்தால் புரியக்கூடும்.இங்கு சுருக்கமாக இதை போல் மற்ற சிலவற்றையும் கூற தலைபட்டிருகிறேன்.


Copenhagen -  இந்த சித்தாந்தம் ஒரு பொருளை கவனிக்கும் போது அதன் உண்மையான நிலையை அவதானிக்கிறோமா இல்லை அது கவனிப்பவருடன் நிகழ்த்தும் தொடர்பை கவனிக்கிறோமா என்று அறிவது இயலாது என்கிறது. அதாவது பிரபஞ்சத்தில் 'பார்ப்பவன் என்றவன் இல்லை 'பங்கு கொள்பவன்' என்பது தான்  நிகழ்கிறது இப்பிரபஞ்சத்தின் நர்த்தனத்தில்-
HERE NO ONE IS A AUDIENCE,EVERY ONE IS A PARTICIPANT.
"ஆகாசம் பூமி  காற்றுமண்டலம் அனைத்து ஜீவிகளின் மூசுக்காற்றோடு  கலந்து காற்று இவை அனைத்தும் எவனொருவானோடு சுற்றி பின்னப்பட்டு உள்ளனவோ அவனே பரமாத்மா"-முண்டக உபநிஷதம்.

spider web -  என்ற  சித்தாந்தத்தின்  படி இப்பிரபஞ்சமே ஒரு பெரிய சிலந்தி வலை என்கிறது. ஆகவே ஒரு இடத்தில் உருவாகும் மாற்றம் வலை வழியாக பரவி இன்னொரு விஷயத்தையோ பொருளையோ பாதிக்கலாம் என்கிறது.
The world is like an enormous spider web and if you touch it, however lightly, at any point, The
vibration ripples to the remotest perimeter and the drowsy spider feels the tingle.


இப்போது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.










இந்துவும் ( விஞ் ) ஞானமும்


இப்பதிவில் இந்து சாஸ்திரங்கள் மற்றும் கீதை என்பற்றை  தர்க்க (logic) ரீதியாகவும் மெய்யியல் அடிப்படையில் உண்மைகளை உள்ள படி உங்களுக்கு உணர்த்துவதே எம் நோக்கம்.

தெளிவுற்றால் சீவனும் சிவனாகும் -திருமூலர்

இங்கு திருமந்திரமும் திருமூலரும் வர என்ன காரணம்  என நீங்கள் நினைக்கலாம். இந்த உலகத்தில் கண்ணுக்கு தெரியாத அணுக்கள் முதற்கொண்டு மானிடர்கள்,மிருகங்கள்,பட்சிகளின் ஒவ்வொரு செயல்களும் இயற்கையின் நடப்புகளுக்கும் தொடர்புகள் உண்டு அவை ஒருதொடர் கோர்வையாக இணைந்து இருக்கிறது இந்த பிரபஞ்சத்தோடு. ஒரு மேற்க்கத்திய தத்துவமானது இதை (chaos theory) ஒழுங்கின்மை கோட்பாட்டின் படி பட்டாம் பூச்சி விளைவு என்கிறது அதாவது ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையின் படபடப்பில் துவங்கும் அதிர்விற்கும் ஒரு பூகம்பத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம். அதே போல் நாம்சொல்லப்போகும் அத்தனை விஷயங்களுக்கும் தொடர்புகள் இருக்கிறது. இந்த தத்துவத்தை மேலும் நீங்கள் விளங்கிகொள்ள இன்னொரு பதிவை இங்கு இணைத்து இருக்கிறேன்..chaos theory -ஒழுங்கின்மை கோட்பாடு


ஒரு ஆன்மீக சொற்பொழிவில் ஒருவர் திருமந்திரத்தின் சிறப்பை கூறும் போது அவர் இந்த உலகம் மஹா பிரளயத்தில் அழிந்த பின்னர் சிவனுக்கு பொழுது போகாவிட்டால் திருமந்திரத்தை எடுத்து படிப்பாராம்.


இது திருமந்திரத்தின் சிறப்பை பாமர மக்களுக்கு விளக்க சொல்லப்பட்டது,இதைப்போல் புராணங்களிலும்,வேதத்திலும் சாஸ்திரங்களும் சாதாரண மனித இனத்திற்கு மெய்ஞானத்தை பலவழிகளில் சொல்லிவிட்டு போய்விட்டனர் அது தவறில்லை நாம் தான் இன்னும் அறியாமையில் தொங்கிக்கொண்டு செய்ததையே செய்து கொண்டு இருக்கிறோம்.


சாஸ்திரங்கள் சாமான்ய மனிதர்கள் கடைபிடித்து தமது கர்மங்களை ஆற்ற சிறந்தது. யோகத்தில் மெய்ஞானத்தை அடையமுடியாத சாமான்யர்களுக்கு பக்தியோகத்தில் மெய்ஞானத்தை அடைய வழிவகுத்து தந்தார்கள் நம் முன்னோர்களான ரிஷிகள்.

"ஒரு சிறந்த கர்ம யோகிக்கு சாஸ்திரங்களை கடைபிடிக்க தேவையும் இல்லை அதை கடைபிடிக்கவிட்டால் பாவமும் தோஷமும் இல்லை ஏனெனில் யோகியானவன் அவன் ஞானிகளை விடவும் சாஸ்திரங்களை கடைபிடிப்பவர்களைவிடவும் மேலானவன் அவன் "யோகாரூடன்" ஆகிறான். அவன் தனது கர்மங்களில் விருப்பு வெறுப்பு அற்று செயல் படுகின்றான்,அவன் யோகத்தினாலேயே பிரம்மத்தை தியானிக்கிறான் பிரம்மத்தின் ஊடாகவே செயல்படுகிறான். மற்றபடி சாமான்யன் நான் சொல்லிய சாஸ்திரங்களின் படி வாழ்கையை வாழவேண்டும் இல்லை எனில் அவன் கொள்கைகள் கட்டுபாடற்ற வாழ்கையை வீணே வாழுகிறான் என்று அர்த்தம் " என்று பகவத்கீதையில் சொல்லப்படுகிறது.

இன்றும் பகவத் கீதை என்ற அரிய பொக்கிஷம் வெறும் நூலாகவே நம் வீடுகளில் உள்ளது ,அவ்வளவு தான். இனிமேல் இனியொரு கிருஷ்ணன் வந்து கீதையை சொன்னாலும் நம்மவர்கள் இப்படித்தான் இருப்பேன் என்றால் ஆச்சர்யம் இல்லை.

இதை படிக்க ஒரு காலத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள் அதாவது நாம் கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை ) பிள்ளைகள் பெற்று அவர்கள் கரையேறிய பின்னர் நம் வாழ்வு முடியப்போகும் வயதான காலத்தில் கீதையை படிப்பது உத்தமம் என்றுரைத்து வைத்து இருக்கிறர்கள். ."கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு " என்ற பழமொழிக்கு ஏற்ப இளமையில் ஞானத்தை உணர்ந்து வாழ முடியாவிடில் இறக்கிற காலத்தில் எதற்கு சுடலை ஞானம் .


பக்தியோகத்தில் மெய்ஞானத்தை கண்டவர்கள் அன்றைய 63 நாயன்மார்கள் மற்றும் 12 ஆழ்வார்கள் என்ற நம் முன்னோர்களான பக்திமான்கள் மற்றும் பலர் அவர்கள் இறைவனை பாடியும் போற்றியும் சாஸ்திரங்களின் படி சுயநலமன்றி வாழ்ந்தார்கள் அதில் அப்பழுக்கற்ற பக்தி இருந்தது.இதை நாம் நன்கு யோசிக்க வேண்டும்.

அன்று இந்து தர்மம் சாஸ்திரங்களும் ஆகமங்களும் பகவத்கீதை மற்றும் 108 உபநிஷதங்களை அடிப்படையாக கொண்டிருந்தது அதாவது கொள்கையை அடிப்படையாகக்கொண்டிருந்தது ஆகையால் சிறந்து விளங்கியது.ஆனால் இன்று இந்து தர்மம் தனிமனிதர்களை அடிப்படையாகக்கொண்டு வழிநடாத்தப்படுகிறது ; இங்கு யாரையும் உதாரணப்படுத்த விரும்பவில்லை ஏனெனில் மக்கள் அவர்களை நன்கு அறிவார்கள்.


எந்த வரலாற்றிலும் இயக்கம்,மதம்,போர் இவை மூன்றும் கொள்கைக்காக தவிர்ந்து தனிமனிதர்களுக்காக போராடி வென்றதில்லை.


உதாரணம்: 1. மகாபாரதப்போரில் பாண்டவர்கள் கொள்கைக்காக போராடினார்கள் ,கௌரவர்கள் துரியோதனன் என்ற தனிமனிதனுக்காய் போராடினார்கள் ஆகையால் தான் கௌரவர்கள் போரில் தோற்றார்கள்.


2.காந்தியின் உப்பு சத்தியாகிரகம்


இப்படி இருக்க இன்று பக்தியோகம் விற்பனைக்குரியதாகி விட்டது,கோயிலில் இறைவனை பணத்திற்கு ஆதாரமாக்கிவிட்டார்கள், குருமார்கள் ஆகமங்களை தமது வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்படுகின்றார்கள்,நான் எல்லோரையும் கூறவில்லை ஆனால் பெருவாரியாக உலகில் இப்படித்தான் நடக்கிறது. மக்களாகிய நாம் அவர்களின் வழியிலும் எமது வழியிலும் எல்லா மத சடங்குகளையும் சாஸ்திரங்களையும் நம்பிக்கைகளையும் உண்மையான காரண காரியம் அறியாது மேலோட்டமான நம்பிக்கையில் அறியாமையில் எல்லா விதமான பூஜைகள் மெய்ஞானமற்ற வழிபாடுகள் சடங்குமுறைகளை செய்கிறோம்.

அன்று இந்து மனிதனை நல்வழிப்படுத்தியதோடு சிந்தித்து செயல்படவைத்தது அனால் இன்றைய மாற்றத்தால்  அறியாமையில் செயல்படவைத்துவிட்டார்கள், இந்து கொள்கைகளை மாற்றி சாஸ்திரம் சடங்கு ஆகமங்களை மற்றும் வேதம் உட்பட தமது அடிமைகளாக்கிக்கொண்டனர்.


இதனையும் நான் இந்து தர்மத்தை எதிர்த்து கூறவில்லை உள்ளதை உள்ளபடி இருக்கச்செய்ய சொல்கிறேன் சுயநலமற்ற முறையிலும் அதோடு நாம் ஏன் இந்த சடங்கு சம்பிரதாயங்கள் சாத்திரங்களை மேற்கொள்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து செய்ய வேண்டும்.அறியாமையில் எந்த மதத்தையும் இயக்கவோ அதற்க்கு கீழ் பொய்யாக இயங்கவோ வேண்டாம், அப்படி இயங்குவது பயனற்ற செயலில் ஈடுபடுவதற்கு சமமாகும். அறியாமையில் எல்லாம் இருந்து கொண்டு சர்வேஸ்வரா,கிருஷ்ணா,நாராயணா என்று பாடுவதாலும் வேதங்களை ஓதுவதிலும் பயனில்லை இதனால் கடவுள் கண்ணுக்கு தெரியப்போவதும் இல்லை உணரப்போவதும் இல்லை வெறும் கல் மட்டும் தான் தெரியும்; செய்கிற காரியங்களை சாட்சிமார்க்கமாக இருந்து நோக்க வேண்டும் இதன் மூலமாகத்தான் ஒருவன் மெய்ஞானத்தை உணரமுடியும் இல்லையெனில் வீணே வாழவேண்டியது தான்.

பிரபஞ்சத்தின் இயற்கையின் படி தான் வேதங்களும் சாஸ்திரங்களும் இருந்து வருகின்றது அதை நாம் நமக்கு ஏற்றாற் போல் மாற்ற நினைப்பது இயற்கைக்கும் கடவுள் என்ற சக்திக்கும் மாறானது. அது ஒரு அணுவை பிளப்பதற்கு சமம்.


சுருக்கமாக சொல்லப்போனால் கீதையில் கிருஷ்ணன் மனித இனத்திற்கு சாஸ்திரத்தை போதிக்க வில்லை எது ஞானம் என்பதை அறிய வழிவகுத்து இருக்கிறான் சாஸ்திரங்கள் வெறுமனே கற்று வருவது அதற்கு ஒரு எல்லை உண்டு, ஆத்ம ஞானம் கற்காமல் வருவது எல்லைகள் இல்லை; சாஸ்திரங்கள் ஒரு மனிதனுக்கு வாழ தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் தெரியாதவர்களுக்கு கட்டுபாடுகள் நிறைந்த ஒரு ஒழுங்கு முறைகொண்ட வாழ்வை வாழ வழி சொல்வது ; ஞானம் தன்னிலையில் இருந்து உணர்வது.


எப்போதும் ஞானத்தை யாராலும் உங்களுக்கு தந்து விடமுடியாது கடவுளை விளக்கினாலும் அது அதை பற்றி சொல்லி விளக்குவதும் இயலாத ஒன்று (கடவுளையும் ஞானத்தையும் பற்றி முழுமையாக விளக்க நான் முழுமையான தகுதியை அடையவில்லை என நினைக்கிறேன்) ஏன் எனறால் அதை விளக்குவது நெருப்பை காணாதவர் எவரும் இல்லை ஆனால் நெருப்பையே காணாதவனிடம் போய் அதன் நிறம் இப்படித்தான் இருக்கும் காற்று இருந்தால் தான் நெருப்பு எரியும் தொட்டால் சுடும் ஏன்று விளக்குவதை போலவும் பனிக்குழைவை சாப்பிடாதவனிடம் போய் அதன் ருசியை பற்றியும் குளிர்மையை பற்றியும் விளக்குவதைப் போல் ஆகும்
ஆகையால் இங்கு ஞானத்தை விளக்குவதற்கு முற்படவில்லை ஏனேனில் அதை சுற்றயுள்ளவற்றை மட்டும் நான் இங்கு சொல்ல முற்படுகின்றேன்.

இவைகளை நான் சொன்னதால் நான் ஆத்தீகவதிகள் எல்லாம் ஒரு வாக்கியம் சொல்வார்கள் "தன்யனானேன் சுவாமி ஜென்மசாபல்யமாச்சு" அதை நான் உங்களுக்கு சொன்னதாலேயே உணர்கிறேன்.

இங்கு நான் "இந்து" என்பதற்கு பக்கத்தில் "மதம்" என்ற வசனத்தை
சேர்க்கவில்லை ஏனேனில்.......
தொடரும்....



Thursday, March 13, 2014

கடவுளும் அணுவும்

கடவுளும் அணுவும்


கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?



நம் உலகம் இந்த பிரபஞ்சத்தில் தேடிக்கொண்டிருக்கும்ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு மாபெரும் உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில்
இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.
 "அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
 அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
 அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
 அணுவின் அணுவினை அணுகலுமாமே"
 -ஆசான் திருமூலர்-

சீவன் என சிவன் என்ன வேறில்லை
 சீவனார் சிவனாரை அறிகிலர்
 சீவனார் சிவனாரை அறிந்தபின்
 சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
 -ஆசான் திருமூலர்-

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
 கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
 மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
 ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
 -ஆசான் திருமூலர்-

இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டுபின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்துபின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

நம் விஞஞானம் சொல்கிறது ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டால். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவேநாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
 (size of an hair = 100 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
 (100 micron = 0.1 millimeter)

இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்
0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
 அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

ஆகவேஇவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானதுநாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா அதுதான் HIGGS BOSON என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது (HIGGS BOSON) ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை.

Wednesday, October 14, 2009

இந்து தர்மத்தின் அடிப்படைகள்!

                            சிந்துநதிக்கரையில் வசித்துவந்தவர்களை ‘சிந்துக்கள்’ அல்லது ‘இந்துக்கள்’ எனப் பாரசீகரும், கிரேக்கரும் அழைத்து வந்தனர். அவர்கள் பின் பற்றிய சமயமே இந்து சமயம் என்று சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்திய நாட்டினரின் மதமே இந்து மதம் எனப்பொருள் கூறுவாரும் உண்டு. ஒரு நாட்டின் பெயராலோ, ஒரு ஆற்றின் பெயராலோ நமது ஒப்புயர்வற்ற மதம் ஏற்பட்டது என்பது பொருத்தமற்றது. அதனால் இதன் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்து மதம் என்னும் பெயர் அதன் கொள்கையை மேற்கொண்டு வந்ததாகும்.

இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம். ஹிம் - ஹிம்சையில், து - துக்கிப் பவன் எனப்பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத் தினாலாவது வருந்துவதாக இருந்தால், அத்துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி அகற்ற முன்வரவேண்டும். அத்தகையவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களை கொண்ட மதமே இந்து மதமாகும்.

அன்பே கடவுள். இறைவன் எல்லா உயிர் களிடத்தும் நீங்காமல் வாழ்கிறான். எல்லா உயிர்களின் உடம்பையே அவன் கோயிலாக கொண்டுள்ளான். ஆதலால் எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடம் அன்பு செலுத்தினால் அருள் வடிவமாகிய ஆண்டவனது அருள் பெறலாம். இதனை திருமூலர் தம் திருமந்திரத்தில்,

“""அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே''’’- என்கிறார்.

இந்து மதம் என்பதற்கு “சனாதன தர்மம்’’ என வேறு ஒரு பெயரும் உண்டு. இதற்கு அழிவில்லாத அறம் என்பது பொருள். மேலும் இந்து சமயம் முறையே திருநெறி, அருள்நெறி தவநெறி, மெயந்நெறி, சன்மார்க்கம் என்ற பல பெயர்களைக் கொண்டது. சமயம் என்பதற்கு ‘சமை’ என்பது பகுதியாய் உடம்பை வளர்ப்பதற்கு உணவுப் பொருளைச் சமைப்பது போல இறைவனை அடைவதற்கு பக்குவப்படுத்து வது இதன் பொருளாகும்.

இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மை யானது. அது ஒருகாலத்தில் உலகெங்கும் பரவி யிருந்தது என்பதை தற்கால நவீன புதைபொருள் ஆராய்ச்சி முதலியவற்றால் அறியலாம். பிற சமயங்கள் கூறும் கொள்கைகள் பல நமது இந்து சமயத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆதலால் உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் தாய்ச் சமயமாக இந்து சமயம் உள்ளது என கூறலாம்.

அறுவகைச் சமயங்கள்

இந்து சமயம் முறையே சைவம், வைணவம் காணாபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம் என்று ஆறுவகையாகப் பகுத்துக் கூறப்படுகிறது.

திருமூலர் இதனை ""ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள்''’’ என்று கூறுகிறார். முதலில் சைவம். சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்ட சமயம் ‘சைவம்’ எனப்பட்டது. சைவத்தில் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மை மிகவும் விளக்கமாய் கூறப்படுகிறது. இவற்றை இறைவன் உயிர், தளை எனவும் கூறுவர்.

அடுத்து வைணவம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் வைணவமாகும். இது வடகலை, தென்கலை என இருவகைப்படும். வட கலையார் வட மொழியில் உள்ள வேதசாத்திரங்களுக்கு முதலிடம் கொடுப்பர். தென் கலையார் தமிழ் மொழியில் உள்ள ஆழ்வார் களால் அருளப் பெற்ற பிரபந்தங்களுக்கு முதலிடம் தருவார்கள்.

இன்னொன்று காணாபத்யம். கணபதியே முழுமுதற்பரம் பொருள்,’ ஓங்கார வடிவினாக அவரை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது காணாபத்யம். இதனை கணாபத்யம் எனவும் கூறுவர்.

கௌமாரம் என்பது குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்பவடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.

சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயமே சாக்தம் ஆகும். சக்தி வழிபாடு - சக்தியே தெய்வம். அவரைத்தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.

சூரியனை வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சமயமாகும். சிவஞான சித்தியார், “அறு வகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர்

பொருளாய்’’ கடவுள் இயங்குகிறார் என இயம்பு கிறது. இதன் அடையாளமாகவே நமது சிவ ஆலயங் களில் கணபதி, முருகன், சூரியன், விஷ்ணு, அம்மையப்பர் மற்றும் துர்க்கையம்மன் ஆகிய திருவுருவங்களை அமைத்து வழிபாடு செய்து வருகின்றோம்.

இந்து சமய இலக்கியங்கள்

ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல் ஒவ்வொன்று உள்ளது. நமது இந்து சமயத் திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பல நூல்கள் உள்ளன.

வேதங்களானது தெய்வீகமான கருத்துகளைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர் பெற்றது. வேதங்களை வியாசர் நான்காக வகுத்துள்ளார். வேதங்களோடு தொடர்பு டைய சம்ஹிதைகள், பிராம்மணங்கள், ஆரண்ய கங்கள் மற்றும் உபநிடதங்கள் இந்து சமய இலக்கியங்களாய் பெருமை சேர்க் கின்றன.

அடுத்து ஆகமம். ஆகமம் என்றால் ஆன்மாக் களின் பாசங்களை நீக்கி வீடுபேற்றை அருளுதல். இவை மொத்தம் இருபத்தெட்டு ஆகமங்கள்

தமிழ் கடவுள் சிவன் மீது பாடப்பட்டவை திருமுறைகள். திருமுறை என்பதற்கு தம்மை அடைந்தவர்களை சிவமேயாக்குகின்ற முறை யெனப் பொருள் கூறுவர். திருமுறைகள் பன்னிரன்டு ஆகும்.

வைணவ சமயத்தில், விஷ்ணுவை தமிழ்ப் பாமாலைகளால் வழிபட்ட பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்தவை. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆகும்.

அதேபோல சாத்திரங்கள் இவை பதினான்கு சாத்திரங்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள் என்பர். இவற்றில் தலை சிறந்தது சிவஞான போதம். சிவம் என்றால் ஒப்பற்ற மெய்ப் பொருள். ஞானம் என்றால் அதனை அறிதல். போதம் என்றால் தெளிதல். எனவே சிவஞான போதம் என்றால் ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய கடவுளை அறிந்து தெளிய உதவும் நூல் என்று பொருள் இது மெய் கண்ட தேவரால் அருளிச் செய்யப் பட்டது.

இதனையடுத்து அருணந்தி சிவாசாரிய சுவாமிகளால் இயற்றப்பட்டது சிவஞான சித்தியார் என்பதாம். மேலும் உமாபதி சிவாசாரியாரால் எட்டு நூல்கள் எழுதப்பட்டன. மெய் கண்டார், அருள் நந்தி, உமாபதி சிவம் ஆகிய சந்தனாச்சாரியார்கள் சைவ சித்தாந்தத்தை முறைப்படுத்தியவர் என்ற பெருமை படைத்தோராவர்.

இந்தியாவின் இரு ஒப்பற்ற காவியங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகும். இதிகாசம் என்பதற்கு “ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு’’ என்று பொருள். இராமாயண காவியத்தை இயற்றினார் வால்மீகி முனிவர். பாரதத்தை வியாச முனிவர் இயற்றினார். இதனை ஐந்தாம் வேதம் என்று சிறப்பித்துக் கூறுவர். பகவத்கீதை இதனுள் அடங்கியுள்ளது.

அடுத்து புராணம். புராணம் என்பதற்கு பழமை யான வரலாறு என்பது பொருள். புராணங்களை எழுதியவர் வேத வியாசர். இதனை உலகிற்கு அளித்தவர் சூதபுராணிகர் என்பதை அறிவோம். இந்த மகாபுராணங்கள் பதினெட்டு ஆகும்.

இந்து சமயக் கோட்பாடுகள்

இந்து சமயம் வலியுறுத்தும் சாதாரண அறக் கோட்பாடுகள் தவிர முக்கியமானவை இரண்டு;

1) வேதாந்த நெறிகள்

2) பகவத் கீதையில் கூறப்படும் நான்கு யோகங்களாகிய மார்க்கங்கள்.

வேதாந்த நெறிகள் முறையே அத்வைதம், விசிஷ்டாத் வைதம், துவைதம் ஆகும்.

அத்வைதக் கோட்பாட்டை உலகிற்களித்தவர் சங்கரர். அத்வைதம் என்னும் சொல்லை அ + துவைதம் எனப்பிரிக்கலாம் அ = இல்லை, துவைதம் - இரண்டு. அத்வைதம் = இரண்டற்ற ஒன்று “அகம்பிர்மாஸ்மி’’ - நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்பது. “பிரம்மம்’’ என்ற ஒரு பொருளே உண்மை, நிலையானது. ஜீவன்கள் அனைத்துமே பிரமம் ஆவர். இறைவனைப் பரமாத்மா என்றும் உயிர்களை ஜீவாத்மா என்றும் ஒவ்வொரு ஜீவாத்மாவும் “பரமாத்மாதான்’’ என்பதே இவ்உயரிய கோட்பாடு ஆகும்.

அதே போல விசிஷ்டாத்வைதம் இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் இராமானுஜர் ஆவார். விசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத் வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத் வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து.

அடுத்து துவைதம் இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் மத்துவர். இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம் என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார்.

இன்னொன்று துதைம். துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாகும். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம் - இவை எவராலும் உண்டாக்கப் படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம் என்பதை வலியுறுத்தும் கோட்பாடு.

நான்கு மார்க்கங்கள்

மனிதன் தான் போகின்ற போக்கிலேயே விட்டால் அவன் படிப்படியாக நிதானமாய் வளர்ச்சியடைவான். மேலும் ஒருபடி சென்று தெய்விகத் தன்மை அடைய லாம். இப்படி காலத்தே வளர்ச்சி தானே நிகழும் என இரு தலை “"எறும்பு வழி'’’ அல்லது பிப்பீலிகா மார்க்கம் என்பர்.

மாறாக மனிதன் தன் உடல் மூச்சு, மனம் அறிவு ஆகியவற்றை பயன்படுத்தி பெருமுயற்சி செய்து இறையருளைப் பெற்று விரைவில் தன்னை முன்னேற் றிக் கொள்வது “"விஹங்கம மார்க்கம்' அல்லது “பறக்கும் வழி’’ எனப்படும். தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் மார்க்கங்கள் (நெறிகள்) முறையே, ஞான மார்க்கம், இராஜ மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் - என்பனவாம்.

இவை முறையே ஞானநெறி, இராஜநெறி, கர்மநெறி மற்றும் பக்தி நெறி என்னும் யோகம் என்றும் போற்றப் படுகின்றன.

முதலில் ஞான மார்க்கம். கூர்மையான அறிவு டையவர்கள் நல்லதையும் கெட்டதையும் அறிந்து, என்றும் நிலைத்திருப்பதையும், விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள்.

இவ்வறிவின் துணை கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளை தேடும் வழியே ‘ஞான மார்க்கம்’ எனப்படும்.

இரண்டாவது இராஜ மார்க்கம். மனிதன் சுய உணர்வுடன் உடம்பு, மூச்சு, மனம் இவற்றைக் கட்டுப் படுத்தி, ஒழுங்குபடுத்தி, தனக்குள்ளே ஒளிந்துகிடக்கும் சக்திகளைத் தூண்டி வெளிப்படுத்துவது ‘ராஜயோகம்’ எனப்படும். இதுவே இராஜமார்க்கம் எனப்படுகிறது. இதன் இறுதி இலட்சியம் மனதில் அல்லது உணர்வில் தோன்றும் அலைகளை அடக்குவது ஆகும். “ஒம்’’ என்ற பிரணவம் இங்கு வழிபடப் படுகின்றது.

மூன்றாவது கர்ம மார்க்கம். வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இரண்டு விதமான பயன்கள் இருக்க வேண்டும்.

ஒன்று அச்செயலினால் சமுதாயத்திற்கு லாபம் கிடைக்க வேண்டும், இரண்டு அச்செயல் அவனுடைய தெய்வ பக்தியை வளர்க்க வேண்டும்.

இந்த இருவிதமான பயன்கள் உடையவையாக ஒவ்வொரு செயலையும் ஆக்கும் விதியைக் கர்ம நெறி என்ற பெயரில் பகவத்கீதை உணர்த்துகிறது. தொழில் வாழ்க்கை, புறவாழ்க்கை என்ற வெளி வாழ்க்கையையும் குளித்தல், நடத்தல், உண்ணுதல், தானம் செய்தல் போன்ற சொந்த வாழ்க்கையின் செயல்கள் ஆகிய அனைத்துமே தனக்கு அக இன்பமும் சமுதாய நலமும் வளரும்படி செய்கின்றன. ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் செய்கின்ற ஆசனம், பிராணாயாமம், தவம், நன்னூலறிவு ஆகிய அனைத்தும் உலக நன்மைக்கும் உதவும்படி எல்லோரும் இன்ப வாழ்வுவாழ கீதை வழி சொல்கின்றது. எனவே சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொரு வரும் தத்தம் கடமைகளை முறையாகவும் திறமை யாகவும் ஆற்றுவதை கர்ம மார்க்கம் எனலாம்.

நான்காவது பக்தி மார்க்கம். பரம்பொருள் மீது கொண்ட அன்பினால் மனிதன் அகந்தையை ஒழித்து, தன் சிறுமையைத் தவிர்த்து, உலகளாவிய உணர்வுள்ள வனாய் தியாகம், அன்பு வாயிலாக உயரிய நிலையை அடைவது பக்தி மார்க்கம். பக்தன் எதை நம்புகிறானோ அதுவாகவேதான் ஆகிவிடுகிறான் என்பது கீதையில் கண்ணன் கருத்து. இதை உணரும் விதம் நாம் பின் வருவனவற்றில் காணலாம். அடக்கமுடைய சரஸ்வதி போன்ற தெய்வங்களை வணங்கும்போது பக்தனும் பணிவுடையுவன் ஆகிறான். பற்றற்ற சிவனாரை வணங்கும் போது பக்தனும் பற்றற்றவனாகிறான். அன்பு மிகுந்த கண்ணனை வணங்கும். போது தருமம் ஆகிய ஆறு நற்குணங்களைக் கொண்ட இறைவனை பக்திப் பரவசத்தால் வழிபடும் போது நாமும் அந்த ஆறு நற் குணங்களை உடையவராகிறோம்.

இறுதியாக, இந்திய பண்பாட்டிற்கு அளித்திருப்பது இந்து சமயந்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தமிழர் பண்பாட்டை எல்லோரும் போற்றச் செய்வதும் நமது பழம்பெரும் இந்து சமயத்தின் வாயிலாகத்தான் என்றால் அது மிகையாகாது.

இந்துவில் மறுபிறப்பு

இந்துவில் மறுபிறப்பு என்று ஒன்றை சொல்லி ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையிலேயே அவர்களை சம்மதிக்கவைக்கிறது.

அதாவது இந்த பிறப்பில் நல்லது செய்தால் மறுபிறப்பில் நல்லவனாக பிறப்பார்கள், வாழ்வார்கள் என்றும்.

அதேவேளை இன்று ஏழைகளாக இருப்பவர்கள் முற்பிறப்பில் பிழைகள், பாவங்கள் செய்தபடியால் தான் இந்தப் பிறப்பில் ஏழையாக இருக்கிறார்கள் என்று, அவர்கள் ஏழையாக இருக்கும் தன்மையை சம்மதிக்க வைக்கிறது.

அதேபோல் பணக்காரராக வாழ்பவர்கள் முற்பிறப்பில் நல்லது செய்து நல்லவர்களாக வாழ்ந்தபடியால்தான் இந்த பிறப்பில் சந்தோஷமாகவும், பணக்காரர்களாகவும் வாழ்கிறார்கள்.

அதாவது ஏழையாக வாழ்பவர்கள் தமக்கோ, தமது குழந்தைகளுக்கோ வயிற்றுப்பசிக்காக கூட ஒரு சின்ன பொய் சொல்லமுடியாமல் பயப்படுத்தபட்டு உள்ளார்கள்.

இந்தியாவை எடுத்து கொண்டால் அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் சமயம், சாஷ்திரங்களை முழுமையாக நம்புபவர்கள், வணங்குபவர்கள்.
இவர்களில் 75 சதவீதத்திற்கு மேலானோர் வறுமை என்னும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்.
அப்படியானால் இவர்கள் எல்லோரும் முற்பிறப்பில் பிழைகள், பாவங்கள் செய்தவர்களா? அதனால் தான் இந்த பிறப்பில் இப்படி வறுமையாக வாழ்கிறார்களா? அப்படியானால் இவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வறுமைகோட்டிற்கு மேல் வரமுடியாதா? அல்லது வரமுடியாமல் ஆக்கப்பட்டுள்ளார்களா? இவர்கள் பரம்பரை பரம்பரையாக இந்தப் பிறவிகளாகத்தான் வாழமுடியுமா?

இந்த கருத்தை நம்பினால் பணக்காரர் எல்லோரும் தாம் பரம்பரை பரம்பரையாக சந்தோஷமாகவும் பணக்காரராகவும் வாழ்ந்து கொண்டே போவார்களா?

ஏழைகள் மறுபிறப்பு என்று ஒன்று உள்ள பயத்தில் வறுமைக்கோட்டிற்கு மேல் வருவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே போவார்களா?

ஏழ்மையையும் விரும்பாமல் மறுபிறப்பிற்கும் பயந்து இருதலைக்கொள்ளி எறும்பு போல் வாழும் அவலம் தொடருமா?

கபிலர் மகரிஷியின் ஆசிரமம்தான் இன்றைய கலிபோர்னியா



அமெரிக்காவும் ஒரு இந்து தேசம்தான் – ஆதாரத்துடன் விளக்கம்

ஸாகரர்கள் குதிரையைத் தேடி பாதாளத்துக்கு வெட்டிக்கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ‘ஸாகர’மாயிற்று.கடைசியில் கபில மகரிஷி ஆஸ்ரமத்திற்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்.அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை இம்சித்தார்கள்.அவரோ ஸாகரர்களை தனது திருஷ்டியினால் பொசுக்கி சாம்பலாக்கினார்.- இது ராமாயணக்கதை.
நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவை பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்(மதுரை என்பது மருதை என்று மாறியது போல)கபிலாரண்யமாக-
கலிபோர்னியாவாக இருக்கலாம்.அதற்குப் பக்கத்தில் குதிரைத்தீவு(Horse Island),சாம்பல் தீவு(Ash Island) இவை உள்ளன.
ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது.ஸகாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.ஸாகரம் தான் ஸகாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.

ஆதாரம்:தெய்வத்தின் குரல் பாகம்-१.காஞ்சிப்பரமாச்சியார் அவர்கள் பக்கம் 168-169 வானதிப் பதிப்பகம் வெளியீடு.
இணையதளம்:www.vanathi.in

சித்தர்கள் கூறியுள்ள ஆரோக்கிய குறிப்பு

நமது உடல்நிலை நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு சித்தர்கள் கூறிய வழிகளில் ஒன்று உள்ளது.இதுவே மிக எளிய வழிமுறை:
நமது உள்ளங்கையை முன்னந்தலையில் வைத்து மணிக்கடை கூர்ந்துபார்க்க வேண்டும்.
முன்கை பருமன் குறுகி குச்சிபோல தோற்றமளித்தால் ஆயுள்,ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

எப்போதாவது ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டோம்.பசி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.என்ன செய்ய?
நமது நாக்கை C போல மடித்து,நாக்கின் நுனியை மேல்வாய்ப் பகுதியினைத் தொடுவதுபோல சிலநிமிடங்கள் வைக்க வேண்டும்.இதனால், பசிக்காது.
ஒரு மனிதனால் இப்படிச் செய்து 12 நாட்கள் வரை பசியைக் கட்டுப்படுத்த முடியும்.

Tuesday, October 6, 2009

யசுர் வேதம்

யசுர் வேதம் (Sanskrit यजुर्वेदः yajurveda, yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது

பிரிவுகள்

யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.

 கிருஷ்ண யசுர்வேதம்

கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:

    * தைத்திரீய சம்ஹிதை
    * மைத்திராயனீ சம்ஹிதை
    * சரக-கதா சம்ஹிதை
    * கபிஸ்தல-கதா சம்ஹிதை

என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.

 சுக்கில யசுர்வேதம்

சுக்கில யசுர்வேதம் இரண்டு உட்பிரிவுகளை உடையது. அவை:

    * வஜசனேயி மத்தியந்தினியம்
    * வஜசனேயி கன்வம்

என்பனவாகும். முன்னையது வடைந்தியாவிலும், ஒரிஸ்சாவிலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபு இதுவாகும். கன்வ சாகை (கன்வ உட்பிரிவு), கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டுமே பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கன்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.

மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது

சாம வேதம்

சாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmaveda, sāman "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.

இருக்கு வேதம்

இருக்கு வேதம் (சமசுகிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இருக்கு வேதம், வேதகால சமசுகிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந் நூலில் போற்றப்படுகிறார்கள்.

இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலா

வேதங்கள்

வேதங்கள் என்பவை இந்து சமயத்தின் அறிவு நூல்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். அதனால் இவை நான்மறை என்றும் கூறப்படும். அவையாவன:

* ரிக் வேதம்
* யஜுர் வேதம்
* சாம வேதம்
* அதர்வண வேதம்


என்பனவாகும்.

இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளது. சுமார் கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது.

இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்றவகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக்கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.


வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:

1. "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்)

கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காட்டு முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யஜுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சடபாத பிராமணா என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சடபாத பிராமணா சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.


முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உண்ர்வதற்குத் துணையான வேதாங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தங்கள் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.

இந்து சமயம்



மேலோட்டம்

இந்து  வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. ஆறு வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.






சனாதன தர்மம்

"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்ட construct களைக் கடந்து, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.

 யோக தர்மம்

இந்து  பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.


வாழ்வின் நான்கு இலக்குகள்

இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளையும் அறம், வீடு என்ற கரைகளுக்கு இடையில் ஓடும் இன்பம், பொருள் என்ற நதி எனவும் சிலர் நோக்குவர்.

சிதம்பர ரகசியம்

"சிதம்பர ரகசியம்" என்ற வார்த்தையை பலர் அடிக்கடி சொல்வார்கள். அதென்ன சிதம்பர ரகசியம்? சிதம்பரத்தில் என்ன இரகசியம் இருக்கிறது. அங்கே நடராஜ பெருமானின் ஆலயம் தான் பிரபலமானது. ஒரு வேளை அதற்குள் ஏதாவது இரகசியம் இருக்குமா? என நான் பலதடவை நினைத்ததுண்டு. சமீபத்தில் இரகசியத்தை அறிந்து கொண்டேன். இதோ இது தான் அந்த வேடிக்கையான சிதம்பர ரகசியம்.

ஒருநாள்,  மிகப்பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள்   பரமசிவன், தில்லை காளி.

யாரிந்த தில்லை காளி? , சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள்.புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையைவிட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?

அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள்.





இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன. இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.

தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.
மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம், இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம்.

காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை...

பார்த்தார் சிவபெருமான், ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா? அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா... சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்...

இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்... தன் இடதுகாலை சற்றே தூக்கினார். நடனத்தின் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தாள் காளி.

சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது, ஆமாம்... இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.

வலதுகாலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக... சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்?... வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார் சிவன்.




வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள்?

காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது. ஆனால், சிவபெருமான்... தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக... சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது.

வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை (அதாவது ஆணுறுப்பை ) வெளிக்காண்டு வந்து... ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

இப்படி ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது. இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். என்று நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Monday, October 5, 2009

இந்து தர்மம் (வரலாறு)

இந்து தர்மம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.


பிற சமயங்கள் போலன்றி இந்துவை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை.
இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள்,  நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒன்றே இந்து தர்மம்.

ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத கால பண்பாட்டில் தோற்றம் பெற்றது.

முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான  செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.

இந்து மகத்துவ பிரியர்கள்